Nimalkumar Blog

Saturday, March 3, 2012

மச்சி.. பழகிடும்டா..


பஸ் பிடிக்கும். படிக்கட்டு பிடிக்கும்.. கண்டக்டர் திட்டு பிடிக்கும்...
டீ பிடிக்கும். டீக்கடை பிடிக்கும்.. தினத்தந்தில மடிச்சு குடுத்த வடை பிடிக்கும்..
பாட்டு பிடிக்கும்.. குதிச்சி ஆட பிடிக்கும்.. தொண்டை கிழிய பாட பிடிக்கும்..
பார்க்க பிடிக்கும்.. கலர் பிடிக்கும்.. கலர் கலரா பூக்கள் பிடிக்கும்..
கூட்டம் பிடிக்கும்.. அரட்டை பிடிக்கும்.. கூடி போடுற மொக்கை பிடிக்கும்..
சிரிப்பு பிடிக்கும்.. காமெடி பிடிக்கும்.. விழுந்து விழுந்து சிரிக்க பிடிக்கும்..
பசி பிடிக்கும்.. சாப்பாடு பிடிக்கும்.. வயிறு தள்ள குமுற பிடிக்கும்..
தூக்கம் பிடிக்கும்.. உதைச்சி தள்ளினாலும்.. சுருண்டு புரண்டு தூங்க பிடிக்கும்..
நிறைய பிடிக்கும்.. எல்லாமே பிடிக்கும்.. இன்னும் என்னன்னவோ பிடிக்கும்..

அதெல்லாம் ஒரு காலம்.. இப்போ அவனுக்கு எதுவுமே பிடிக்காம போச்சு..
ஏன்னா.. அவனுக்கு இப்போ, அவள மட்டும்தான் பிடிக்கும்!


நல்ல பையன்..
நல்லாதான் இருந்தான்..
நல்லா மொக்க போடுவான்..
ஜாலியா ஊர் சுத்திட்டிருப்பான்..
நிம்மதியா தூங்கிட்டிருப்பான்..

அவள பாத்ததிலருந்து மொத்தமா மாறிட்டான் -
எல்லாமே ராயல்-தான்..
பஸ் பார்த்தா மூஞ்சிய திருப்பிக்கிறான்.. புது பைக் வாங்கி ஊர சுத்தி திரியிறான்..
டீ கடை அக்கௌன்ட் கூட முடிக்கல.. காபி டே-ல காசை காபி-யா செலவு பண்றான்..
தூங்கவே மாட்டேன்றான்.. மொட்டைமாடில குப்புறபடுத்து, காத்துல ஏதோ வரைஞ்சிட்டிருக்கான்..
சாப்ட வரலைன்றான்.. பசிக்கிறதே இல்லேங்கிறான்.. ரெண்டு இட்லி-ய ரெண்டு மணி நேரம் திங்கிறான்..
கூட்டத்த பாத்தா ஓரமா ஒதுங்கிடறான்.. மொக்க போடாதீங்கடானு அட்வைஸ் பண்ணிட்டு போன்ல கடலைய ஆரம்பிச்சுடறான்..

ஒரு வேளை "காதல்"-ல கவுந்துட்டானோ?
இதெல்லாம் ஒரு கேள்வியா?
தமிழ்படம் பார்த்திருக்கிற கைக்குழந்தை கூட சொல்லும் - அந்த 'எழவு'லதான் விழுந்துட்டான்-னு!!

நண்பனாச்சே.. விழுந்துட்டான்-னு விட்டுட முடியுமா?
எவ்ளோ ஆழத்துல இருக்கான்-னு தெரிஞ்சிகிடலாம்னு ஒரு ஆர்வம்..
எப்படியாவது அவன மாத்தி திரும்பவும் ஜாலி life-க்கு கூட்டிட்டு வந்துடலாம்னு நம்பினேன்..


மொட்டைமாடி தண்ணிதொட்டி-ல அவன மடக்கி புடிச்சேன்..

" மச்சி.. டேய்.. என்னடா பண்ற இங்க, மதியம் ஒரு மணி வெயில்ல?"

"சும்மாதான்.. காத்து வாங்கிட்டிருக்கேன்.."

"இது என்னடா புதுசா இருக்கு? வழக்கமா Fan-லதான் காத்து வாங்குவோம்.. நீ Phone-ல வாங்கிகிட்டிருக்க..?!!"

 "மச்சி.. மொக்க போடாதடா.. நான் already moodout-ல இருக்கேன்டா.."

பையன் ஏதோ கோபமா இருக்கான்.. அவ கூட சண்ட போட்டிருப்பான்-னு நெனைக்கிறேன்.. இதுதானே சரியான நேரம்!
ஏதாவது சொல்லி அவன வழிக்கு கொண்டு வந்துடலாம்னு தோணிச்சு!


"என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?"

"ம்ம்.. எதை சொல்றது உன்கிட்ட..? நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ நாளா பழகிக்கிட்டிருக்கோம்-னு, உனக்கு தெரியாததா?? நீதானே எனக்கு முதல்நாள்ல இருந்து ஹெல்ப் பண்ணிட்டிருக்க..
எனக்காக கார்டு செலக்ட் பண்ணி குடுத்து.. அத நீயே எனக்காக அவகிட்ட ரிஸ்க் எடுத்து கொண்டு போயி நீட்டி.. அவ உன்ன தப்பா புரிஞ்சிகிட்டு செருப்ப காட்டி.. அதவேற அவ அண்ணன் பாத்துட்டு, உன்ன தனியா பிடிச்சு பின்னி பெடலெடுத்தானே.. அப்புறம் உங்க வீட்ல கூட உன்ன காறி துப்.. "

"டேய்.. நிப்பாட்டு.. இப்போ எதுக்கு என்னை போட்டு வாங்குற?? உன் பிரச்சின என்னன்னு மட்டும் சொல்லு.."

"மச்சி நீ தியாகிடா.. எனக்காக எவ்ளோ அடி தாங்கிருக்க??"

இவனுக்கு என்ன ஆச்சு? அவ அண்ணன்-ட்ட அடி வாங்கி ஆஸ்பத்திரி-ல படுத்திருக்கும்போது கூட.. எப்டி இருக்கேன்-னு ஒரு தடவ கூட கேக்கலையே.. ஆர்வமா ஓடி வந்து, 'அவ என்ன பதில் சொன்னா'-னுதானே கேட்டான்.. இப்போ எதுக்கு இப்டி பிழியிறான்..?!

நான் சந்தேகத்துல கேட்டேன் - "மச்சி.. தண்ணி-கிண்ணி போட்டிருக்கியா?"

"இல்லடா மச்சி.. purse வச்சிருக்கியா.. போலாமா??"

அய்யயோ.. இப்பவே டயலாக் அள்ளி தெளிக்கிறான்.. இதுல தண்ணி வேற அடிச்சான்னா நான் தொலைஞ்சேன். இங்கயே சமாளிப்போம் அவன..

"என்னடா ஆச்சு.. அவகூட சண்ட போட்டியா?'

"ஆமா மச்சி.. பிரச்சினையே இல்ல மச்சி.. ஆனா சண்ட வந்துடிச்சி.. அது என் தப்பா.. இல்ல அவ தப்பா-னு தெரியாம குழம்பி போயிருக்கேன் மச்சி.."

"அத சொல்றதுக்குதானடா நான் வந்திருக்கேன்.. நீ என்ன பிரச்சினைன்னு சொல்லு.. தூக்கிடலாம்"..

"கேளு மச்சி..நேத்து பார்க் போயிருந்தோம்.. பேசிட்டிருக்கும்போது அவகிட்ட ஒரு சின்ன விஷயம் கேட்டேன்.. அதுக்கு போயி செருப்ப காட்டிட்டா.."

"டேய்.. நீ ஏன்டா பப்ளிக்-ல வச்சு இப்டி கேக்கற? இதெல்லாம் தப்பில்லையா?"

"மச்சி.. நீ நெனைக்கிற மாதிரி அப்டி ஒன்னும் கேக்கலடா.. Photo எடுக்கும்போது கொஞ்சம் சிரிக்க சொன்னேன்.. அதுக்குபோயி செருப்ப காட்டிட்டா மச்சி.."

ஓ.. உனக்கும் செருப்பா!! மனசுக்கு சின்ன நிம்மதி.. Same Blood! வெளிக்காட்டாம கேட்டேன் -

"டேய்.. பொய் சொல்லாத.. சிரிக்க சொன்னா எதுக்கு செருப்ப காட்றா? நம்ப முடியலையே.. உண்மையா சொல்லு, என்ன நடந்துச்சி?"

"ஆமா மச்சி.. என்னாலயும் நெறைய நம்ப முடியல.. நான் பாத்த எந்த தமிழ்படத்திலயும் இந்த மாதிரிலாம் நடந்ததே இல்ல.. ஆனா ஏன் இப்டி நடக்குதுன்னு புரியவே மாட்டேங்குது.. வாழ்க்கையில என்...... "

"டேய்.. நிப்பாட்டு. தத்துவம் பேசாத.. என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு.."

"இல்ல மச்சி.. சொன்னா நம்ப மாட்ட.. ஆரம்பத்தில நல்லாதான் போயிட்டிருந்தது.. 
அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துக்கும் சண்ட போட ஆரம்பிச்சுட்டா..  
அவளுக்கு நான் பண்ற எதுவுமே பிடிக்க மாட்டேங்குது..
போன் பண்ணலைனாலும் பிடிக்கல.. போன் பேசிட்டே இருக்குறதுக்கும் பிடிக்கல..
செலவு பண்ணினாலும் பிடிக்கல.. செலவு பண்ணலைனாலும் பிடிக்கல..
ஆட்டோ-ல போறதுக்கும்  பிடிக்கல.. பைக்-ல போறதுக்கும்  பிடிக்கல..
பைக் வேகமா ஓட்டினாலும்  பிடிக்கல.. மெதுவா ஓட்னாலும்  பிடிக்கல..
சட்டையில பட்டன் போட்டாலும்  பிடிக்கல.. கழட்டி விட்டாலும்  பிடிக்கல..
நான் ரொம்ப சாப்ட்டாலும்  பிடிக்கல.. கம்மியா சாப்டாட்டாலும் பிடிக்கல..
அவள கொஞ்சினாலும் பிடிக்கல.. கொஞ்சலைனாலும்  பிடிக்கல..
பிடிக்கல.. அவளுக்கு எதுவுமே பிடிக்கல.. என்ன பண்ணினாலும் பிடிக்கல.. "

நல்ல சகுனம்தான்.. அவனோட பிரச்சினை அவனுக்கு புரிஞ்சிடுசினு தோணிச்சு..
"மச்சி.. அத விட்ரா..  இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இன்னும் நீ சொல்லல.."

"சொல்றேன் மச்சி.. 
காலைல பார்க் போயிருந்தோம்..  பேசிட்டிருந்தப்போ திடீர்னு தோணிச்சு.. 
அவகிட்ட கேட்டேன் - 'உன்ன ஒரு போட்டோ எடுத்துக்கவா?'
'hey.. எதுக்கு போட்டோ-லாம் எடுக்கற? நான்தான் உன்கூடயே இருக்கேனே'
'கரெக்ட்-தான்.. இருந்தாலும் தனியா இருக்கும்போது உன்ன பார்த்துப்பேன்ல..'
ரொம்ப நேரம் பேசி, ஒரு வழியா சம்மதிச்சா.. போன் கேமரா-ல அவள focus பண்ணிட்டு..
'Camera-வ கொஞ்சம் பாரு.. Light-aa சிரி'-ன்னு சொன்னேன்..
'இல்லடா.. எனக்கு tired-aa  இருக்கு.. அப்டியே எடு..'
'நீ சிரிச்சா எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா.. கொஞ்சமா சிரியேன்..'
'அப்போ.. என்ன சொல்ல வர்ற? இப்போ நான் அழகா இல்லைன்றயா?'
'ச்சே ச்சே.. நீ எப்பவும் அழகுதான்.. உன்ன எப்பிடி எடுத்தாலும் அழகுதான்!' (எப்படியிலாம் பொய் சொல்லிருக்கான்..!)
ஒரு வழியா சமாளிச்சு photo எடுத்து முடிச்சேன்.. Photo பாத்துட்டு அவ கேட்டா..
'நல்லா இருக்கா போட்டோ? Ear rings கரெக்ட்-ஆ வந்திருக்கா..?'
'நீயே அழகா இருக்கும்போது.. நான் ஏன் அதெல்லாம் பாக்க போறேன்..'
'உனக்கு ஏன், நான் என்ன புதுசா போட்டாலும் பிடிக்க மாட்டேங்குது?'
'இது என்னடா வம்பா போச்சு.. நான் பிடிக்கலைன்னு சொல்லல.. ஆனா..'
'அப்போ.. நீ பிடிக்கலைனா சொல்ல மாட்ட?'
'இல்ல.. நீ ஏன் எல்லாத்தையும் வேற மாதிரி புரிஞ்சுக்கற? நான் என்ன சொல்..'
'நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நேத்து கூட என்னோட புது watch பாத்துட்டு ஒண்ணுமே சொல்லல..'
'அடடா.. அது புது வாட்சா? பாத்தியா நீ சொல்லவே இல்ல...'
....... டண்டணக்கா டணக்குணக்கா.. டண்டணக்கா டணக்குணக்கா ...
கொஞ்சம் நேரத்துல அவ ஏறி பேச.. நான் எகிறி பேச..
கடைசில செருப்பு அவ கைக்கு வந்துடிச்சி மச்சி.. "

"அடப்பாவி.. இதெல்லாம் நீ குடுக்கற இடம்தான்.. என்னதான் இருந்தாலும் அவ இப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாது..
இவ்வளவு நடக்கற வரைக்கும் நீ என்னடா பண்ணிட்டிருந்த?"

"""Sorry சொல்லிட்டு.. night போன் பண்றதா சொல்லிட்டு வந்துட்டேன் மச்சி.."

"இப்போ என்ன முடிவு பண்ணிருக்க? இதெல்லாம் சரி இல்ல.. நல்ல முடிவா சீக்கிரம் எடு.."  

"என்னன்னே தெரியல மச்சி.. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.. 
சிலநேரம் அவ பண்றது சரிதான்னு தோணுது.. எதுக்கு என்கிட்ட சண்ட போடுறா? கோபம் இருக்கற எடத்துலதானே மச்சி குணம் இருக்கும்..
என் மேல அளவுக்கதிகமா பாசமா இருக்காடா.. நான் எல்லாத்தையும் ரசிக்கணும்னு நினைக்கிறா.. 
நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவள பத்தியே இருக்கணும்னு ஆசைபடுறா மச்சி.. அதான் குழப்பமா இருக்கு.. ஏன் மச்சி என் மேல இவ்ளோ பைத்தியமா இருக்கா..?? "

அடடா.. கடவுளே.. இவன் இன்னும் மாறலை..
இது முத்தி போயிடுத்து.. பையன் ரொம்ப ஆழமா இறங்கிட்டான்..
இதுக்கப்புறமும் advise பண்ணி அவன திரும்ப கொண்டு வர முடியாது..
அப்டியே பண்ணாலும், தாடி வளர்த்து தெருத்தெருவா கவிதை எழுத ஆரம்பிச்சுடுவான்..
(already நம்ம போடுற மொக்கையே தாங்க முடியல..)
Bachelor Life-a Enjoy பண்றதுக்கு, இவன் குடுத்து வச்சது அவ்ளோதான்..

அப்போ என்னதான் பண்றது?
ம்ம்.. அவன மாத்த முடிய முடியலைனா.. நாம மாறிட வேண்டியதுதான்..!

சமாதானமா சொன்னேன் -
"விட்ரா மச்சி.. இதெல்லாம் சகஜம்தான்.. 
ஒரு தடவைதான் மச்சி.. பொண்ணுங்க கோபப்படுவாங்க, கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.."

"அப்போ.. இனிமே என்கிட்ட கோபப்படவே மாட்டா-ன்னு சொல்றியா??"

"மச்சி.. பழகிடும்டா..!"


Enjoy the life,
Nimal

No comments:

Post a Comment

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer