Nimalkumar Blog

Wednesday, April 4, 2012

பொம்மைகள்..


தொட்டில்கயிறு இழுப்பில்
கண்மூடி தூங்கினோம்

பள்ளி ஈர்குச்சி மிரட்டலில்
புத்தகம் வெறுத்தோம்

நட்பில் பகிர்ந்த பழக்கங்களில்
அர்த்தங்கள் பல அறிந்தோம்

காதலின் கண்ணசைவில்
கவிதையாய் மாறினோம்

குடும்பமெனும் கடிவாளம் மாட்டி
எங்கோ ஓடி ஏதோ தேடினோம்

அனுபவம் என்ற அலைக்கழிப்பில்
மனம் உலர்ந்து உதிர்ந்தோம்

முடி நுரைத்து கண் புரைத்தபோது
வயதும் மனதும் தளர்ந்தோம்

தலைமுறை எட்டி தள்ளியபோது
கடைசியாய் கடவுள் தேடினோம்

பகட்டான பல்லக்கின் சுகத்தில்
ஆடி அசைந்து பயணம் முடித்தோம்.
--

பிறந்து வளர்ந்தோம் -
தளர்ந்து மறைந்தோம் -
இடைப்பட்ட கொஞ்ச காலத்தில் -
அடுத்தவரின் கைகளில் பொம்மைகள் ஆனோம்..!


ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கடைசிவரை,
காற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு முற்றுபுள்ளி-யாகவே ( ? ) ஆடி அடங்குகிறது..


வாழ்க மகிழ்வுடன்,
நிமல்

Saturday, March 3, 2012

மச்சி.. பழகிடும்டா..


பஸ் பிடிக்கும். படிக்கட்டு பிடிக்கும்.. கண்டக்டர் திட்டு பிடிக்கும்...
டீ பிடிக்கும். டீக்கடை பிடிக்கும்.. தினத்தந்தில மடிச்சு குடுத்த வடை பிடிக்கும்..
பாட்டு பிடிக்கும்.. குதிச்சி ஆட பிடிக்கும்.. தொண்டை கிழிய பாட பிடிக்கும்..
பார்க்க பிடிக்கும்.. கலர் பிடிக்கும்.. கலர் கலரா பூக்கள் பிடிக்கும்..
கூட்டம் பிடிக்கும்.. அரட்டை பிடிக்கும்.. கூடி போடுற மொக்கை பிடிக்கும்..
சிரிப்பு பிடிக்கும்.. காமெடி பிடிக்கும்.. விழுந்து விழுந்து சிரிக்க பிடிக்கும்..
பசி பிடிக்கும்.. சாப்பாடு பிடிக்கும்.. வயிறு தள்ள குமுற பிடிக்கும்..
தூக்கம் பிடிக்கும்.. உதைச்சி தள்ளினாலும்.. சுருண்டு புரண்டு தூங்க பிடிக்கும்..
நிறைய பிடிக்கும்.. எல்லாமே பிடிக்கும்.. இன்னும் என்னன்னவோ பிடிக்கும்..

அதெல்லாம் ஒரு காலம்.. இப்போ அவனுக்கு எதுவுமே பிடிக்காம போச்சு..
ஏன்னா.. அவனுக்கு இப்போ, அவள மட்டும்தான் பிடிக்கும்!


நல்ல பையன்..
நல்லாதான் இருந்தான்..
நல்லா மொக்க போடுவான்..
ஜாலியா ஊர் சுத்திட்டிருப்பான்..
நிம்மதியா தூங்கிட்டிருப்பான்..

அவள பாத்ததிலருந்து மொத்தமா மாறிட்டான் -
எல்லாமே ராயல்-தான்..
பஸ் பார்த்தா மூஞ்சிய திருப்பிக்கிறான்.. புது பைக் வாங்கி ஊர சுத்தி திரியிறான்..
டீ கடை அக்கௌன்ட் கூட முடிக்கல.. காபி டே-ல காசை காபி-யா செலவு பண்றான்..
தூங்கவே மாட்டேன்றான்.. மொட்டைமாடில குப்புறபடுத்து, காத்துல ஏதோ வரைஞ்சிட்டிருக்கான்..
சாப்ட வரலைன்றான்.. பசிக்கிறதே இல்லேங்கிறான்.. ரெண்டு இட்லி-ய ரெண்டு மணி நேரம் திங்கிறான்..
கூட்டத்த பாத்தா ஓரமா ஒதுங்கிடறான்.. மொக்க போடாதீங்கடானு அட்வைஸ் பண்ணிட்டு போன்ல கடலைய ஆரம்பிச்சுடறான்..

ஒரு வேளை "காதல்"-ல கவுந்துட்டானோ?
இதெல்லாம் ஒரு கேள்வியா?
தமிழ்படம் பார்த்திருக்கிற கைக்குழந்தை கூட சொல்லும் - அந்த 'எழவு'லதான் விழுந்துட்டான்-னு!!

நண்பனாச்சே.. விழுந்துட்டான்-னு விட்டுட முடியுமா?
எவ்ளோ ஆழத்துல இருக்கான்-னு தெரிஞ்சிகிடலாம்னு ஒரு ஆர்வம்..
எப்படியாவது அவன மாத்தி திரும்பவும் ஜாலி life-க்கு கூட்டிட்டு வந்துடலாம்னு நம்பினேன்..


மொட்டைமாடி தண்ணிதொட்டி-ல அவன மடக்கி புடிச்சேன்..

" மச்சி.. டேய்.. என்னடா பண்ற இங்க, மதியம் ஒரு மணி வெயில்ல?"

"சும்மாதான்.. காத்து வாங்கிட்டிருக்கேன்.."

"இது என்னடா புதுசா இருக்கு? வழக்கமா Fan-லதான் காத்து வாங்குவோம்.. நீ Phone-ல வாங்கிகிட்டிருக்க..?!!"

 "மச்சி.. மொக்க போடாதடா.. நான் already moodout-ல இருக்கேன்டா.."

பையன் ஏதோ கோபமா இருக்கான்.. அவ கூட சண்ட போட்டிருப்பான்-னு நெனைக்கிறேன்.. இதுதானே சரியான நேரம்!
ஏதாவது சொல்லி அவன வழிக்கு கொண்டு வந்துடலாம்னு தோணிச்சு!


"என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?"

"ம்ம்.. எதை சொல்றது உன்கிட்ட..? நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ நாளா பழகிக்கிட்டிருக்கோம்-னு, உனக்கு தெரியாததா?? நீதானே எனக்கு முதல்நாள்ல இருந்து ஹெல்ப் பண்ணிட்டிருக்க..
எனக்காக கார்டு செலக்ட் பண்ணி குடுத்து.. அத நீயே எனக்காக அவகிட்ட ரிஸ்க் எடுத்து கொண்டு போயி நீட்டி.. அவ உன்ன தப்பா புரிஞ்சிகிட்டு செருப்ப காட்டி.. அதவேற அவ அண்ணன் பாத்துட்டு, உன்ன தனியா பிடிச்சு பின்னி பெடலெடுத்தானே.. அப்புறம் உங்க வீட்ல கூட உன்ன காறி துப்.. "

"டேய்.. நிப்பாட்டு.. இப்போ எதுக்கு என்னை போட்டு வாங்குற?? உன் பிரச்சின என்னன்னு மட்டும் சொல்லு.."

"மச்சி நீ தியாகிடா.. எனக்காக எவ்ளோ அடி தாங்கிருக்க??"

இவனுக்கு என்ன ஆச்சு? அவ அண்ணன்-ட்ட அடி வாங்கி ஆஸ்பத்திரி-ல படுத்திருக்கும்போது கூட.. எப்டி இருக்கேன்-னு ஒரு தடவ கூட கேக்கலையே.. ஆர்வமா ஓடி வந்து, 'அவ என்ன பதில் சொன்னா'-னுதானே கேட்டான்.. இப்போ எதுக்கு இப்டி பிழியிறான்..?!

நான் சந்தேகத்துல கேட்டேன் - "மச்சி.. தண்ணி-கிண்ணி போட்டிருக்கியா?"

"இல்லடா மச்சி.. purse வச்சிருக்கியா.. போலாமா??"

அய்யயோ.. இப்பவே டயலாக் அள்ளி தெளிக்கிறான்.. இதுல தண்ணி வேற அடிச்சான்னா நான் தொலைஞ்சேன். இங்கயே சமாளிப்போம் அவன..

"என்னடா ஆச்சு.. அவகூட சண்ட போட்டியா?'

"ஆமா மச்சி.. பிரச்சினையே இல்ல மச்சி.. ஆனா சண்ட வந்துடிச்சி.. அது என் தப்பா.. இல்ல அவ தப்பா-னு தெரியாம குழம்பி போயிருக்கேன் மச்சி.."

"அத சொல்றதுக்குதானடா நான் வந்திருக்கேன்.. நீ என்ன பிரச்சினைன்னு சொல்லு.. தூக்கிடலாம்"..

"கேளு மச்சி..நேத்து பார்க் போயிருந்தோம்.. பேசிட்டிருக்கும்போது அவகிட்ட ஒரு சின்ன விஷயம் கேட்டேன்.. அதுக்கு போயி செருப்ப காட்டிட்டா.."

"டேய்.. நீ ஏன்டா பப்ளிக்-ல வச்சு இப்டி கேக்கற? இதெல்லாம் தப்பில்லையா?"

"மச்சி.. நீ நெனைக்கிற மாதிரி அப்டி ஒன்னும் கேக்கலடா.. Photo எடுக்கும்போது கொஞ்சம் சிரிக்க சொன்னேன்.. அதுக்குபோயி செருப்ப காட்டிட்டா மச்சி.."

ஓ.. உனக்கும் செருப்பா!! மனசுக்கு சின்ன நிம்மதி.. Same Blood! வெளிக்காட்டாம கேட்டேன் -

"டேய்.. பொய் சொல்லாத.. சிரிக்க சொன்னா எதுக்கு செருப்ப காட்றா? நம்ப முடியலையே.. உண்மையா சொல்லு, என்ன நடந்துச்சி?"

"ஆமா மச்சி.. என்னாலயும் நெறைய நம்ப முடியல.. நான் பாத்த எந்த தமிழ்படத்திலயும் இந்த மாதிரிலாம் நடந்ததே இல்ல.. ஆனா ஏன் இப்டி நடக்குதுன்னு புரியவே மாட்டேங்குது.. வாழ்க்கையில என்...... "

"டேய்.. நிப்பாட்டு. தத்துவம் பேசாத.. என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு.."

"இல்ல மச்சி.. சொன்னா நம்ப மாட்ட.. ஆரம்பத்தில நல்லாதான் போயிட்டிருந்தது.. 
அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துக்கும் சண்ட போட ஆரம்பிச்சுட்டா..  
அவளுக்கு நான் பண்ற எதுவுமே பிடிக்க மாட்டேங்குது..
போன் பண்ணலைனாலும் பிடிக்கல.. போன் பேசிட்டே இருக்குறதுக்கும் பிடிக்கல..
செலவு பண்ணினாலும் பிடிக்கல.. செலவு பண்ணலைனாலும் பிடிக்கல..
ஆட்டோ-ல போறதுக்கும்  பிடிக்கல.. பைக்-ல போறதுக்கும்  பிடிக்கல..
பைக் வேகமா ஓட்டினாலும்  பிடிக்கல.. மெதுவா ஓட்னாலும்  பிடிக்கல..
சட்டையில பட்டன் போட்டாலும்  பிடிக்கல.. கழட்டி விட்டாலும்  பிடிக்கல..
நான் ரொம்ப சாப்ட்டாலும்  பிடிக்கல.. கம்மியா சாப்டாட்டாலும் பிடிக்கல..
அவள கொஞ்சினாலும் பிடிக்கல.. கொஞ்சலைனாலும்  பிடிக்கல..
பிடிக்கல.. அவளுக்கு எதுவுமே பிடிக்கல.. என்ன பண்ணினாலும் பிடிக்கல.. "

நல்ல சகுனம்தான்.. அவனோட பிரச்சினை அவனுக்கு புரிஞ்சிடுசினு தோணிச்சு..
"மச்சி.. அத விட்ரா..  இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இன்னும் நீ சொல்லல.."

"சொல்றேன் மச்சி.. 
காலைல பார்க் போயிருந்தோம்..  பேசிட்டிருந்தப்போ திடீர்னு தோணிச்சு.. 
அவகிட்ட கேட்டேன் - 'உன்ன ஒரு போட்டோ எடுத்துக்கவா?'
'hey.. எதுக்கு போட்டோ-லாம் எடுக்கற? நான்தான் உன்கூடயே இருக்கேனே'
'கரெக்ட்-தான்.. இருந்தாலும் தனியா இருக்கும்போது உன்ன பார்த்துப்பேன்ல..'
ரொம்ப நேரம் பேசி, ஒரு வழியா சம்மதிச்சா.. போன் கேமரா-ல அவள focus பண்ணிட்டு..
'Camera-வ கொஞ்சம் பாரு.. Light-aa சிரி'-ன்னு சொன்னேன்..
'இல்லடா.. எனக்கு tired-aa  இருக்கு.. அப்டியே எடு..'
'நீ சிரிச்சா எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா.. கொஞ்சமா சிரியேன்..'
'அப்போ.. என்ன சொல்ல வர்ற? இப்போ நான் அழகா இல்லைன்றயா?'
'ச்சே ச்சே.. நீ எப்பவும் அழகுதான்.. உன்ன எப்பிடி எடுத்தாலும் அழகுதான்!' (எப்படியிலாம் பொய் சொல்லிருக்கான்..!)
ஒரு வழியா சமாளிச்சு photo எடுத்து முடிச்சேன்.. Photo பாத்துட்டு அவ கேட்டா..
'நல்லா இருக்கா போட்டோ? Ear rings கரெக்ட்-ஆ வந்திருக்கா..?'
'நீயே அழகா இருக்கும்போது.. நான் ஏன் அதெல்லாம் பாக்க போறேன்..'
'உனக்கு ஏன், நான் என்ன புதுசா போட்டாலும் பிடிக்க மாட்டேங்குது?'
'இது என்னடா வம்பா போச்சு.. நான் பிடிக்கலைன்னு சொல்லல.. ஆனா..'
'அப்போ.. நீ பிடிக்கலைனா சொல்ல மாட்ட?'
'இல்ல.. நீ ஏன் எல்லாத்தையும் வேற மாதிரி புரிஞ்சுக்கற? நான் என்ன சொல்..'
'நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நேத்து கூட என்னோட புது watch பாத்துட்டு ஒண்ணுமே சொல்லல..'
'அடடா.. அது புது வாட்சா? பாத்தியா நீ சொல்லவே இல்ல...'
....... டண்டணக்கா டணக்குணக்கா.. டண்டணக்கா டணக்குணக்கா ...
கொஞ்சம் நேரத்துல அவ ஏறி பேச.. நான் எகிறி பேச..
கடைசில செருப்பு அவ கைக்கு வந்துடிச்சி மச்சி.. "

"அடப்பாவி.. இதெல்லாம் நீ குடுக்கற இடம்தான்.. என்னதான் இருந்தாலும் அவ இப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாது..
இவ்வளவு நடக்கற வரைக்கும் நீ என்னடா பண்ணிட்டிருந்த?"

"""Sorry சொல்லிட்டு.. night போன் பண்றதா சொல்லிட்டு வந்துட்டேன் மச்சி.."

"இப்போ என்ன முடிவு பண்ணிருக்க? இதெல்லாம் சரி இல்ல.. நல்ல முடிவா சீக்கிரம் எடு.."  

"என்னன்னே தெரியல மச்சி.. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.. 
சிலநேரம் அவ பண்றது சரிதான்னு தோணுது.. எதுக்கு என்கிட்ட சண்ட போடுறா? கோபம் இருக்கற எடத்துலதானே மச்சி குணம் இருக்கும்..
என் மேல அளவுக்கதிகமா பாசமா இருக்காடா.. நான் எல்லாத்தையும் ரசிக்கணும்னு நினைக்கிறா.. 
நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவள பத்தியே இருக்கணும்னு ஆசைபடுறா மச்சி.. அதான் குழப்பமா இருக்கு.. ஏன் மச்சி என் மேல இவ்ளோ பைத்தியமா இருக்கா..?? "

அடடா.. கடவுளே.. இவன் இன்னும் மாறலை..
இது முத்தி போயிடுத்து.. பையன் ரொம்ப ஆழமா இறங்கிட்டான்..
இதுக்கப்புறமும் advise பண்ணி அவன திரும்ப கொண்டு வர முடியாது..
அப்டியே பண்ணாலும், தாடி வளர்த்து தெருத்தெருவா கவிதை எழுத ஆரம்பிச்சுடுவான்..
(already நம்ம போடுற மொக்கையே தாங்க முடியல..)
Bachelor Life-a Enjoy பண்றதுக்கு, இவன் குடுத்து வச்சது அவ்ளோதான்..

அப்போ என்னதான் பண்றது?
ம்ம்.. அவன மாத்த முடிய முடியலைனா.. நாம மாறிட வேண்டியதுதான்..!

சமாதானமா சொன்னேன் -
"விட்ரா மச்சி.. இதெல்லாம் சகஜம்தான்.. 
ஒரு தடவைதான் மச்சி.. பொண்ணுங்க கோபப்படுவாங்க, கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.."

"அப்போ.. இனிமே என்கிட்ட கோபப்படவே மாட்டா-ன்னு சொல்றியா??"

"மச்சி.. பழகிடும்டா..!"


Enjoy the life,
Nimal

Monday, February 20, 2012

TERROR -- Together, we are making ERROR??


Terror incidents - which always grab everyone's high attention and make every citizen to feel for the victims.
Everyone of us desperately wants "someone" to take "some action" to stop these tragedies happening..
Of course, We have to stop this for sure.
Those responsibilities usually get assigned to "someone", so called high diplomats who exchange series of hot reports, evidences, agreements, etc etc with other countries. They always do the best that they can do.
But we all know, the terror acts never brought to an end and no one ever able to arrive at the solution.
They tried every possible options - More military? - More fund?? - More surveillance???
NO.. hardly helps. So it is time to think about an amicable solution..

The real question we are dealing here is - Is the terror caused by the error that we make together?

Before pitching into main topic, will present a set of questions that I came across recently.. which subsequently triggered a spark in mind after a while.
- Are you a racist? My answer was no
- Do you support Caste? My answer was no
- Are you a religionist? My answer was no
- Are you Patriotic? My answer was YES, of course!

(Thanks to DV for throwing these questions at me..)
At the first time, I thought that these questions were crazy and particularly my mind did not accept to combine the patriotic question with other three questions.
becoz, Being-Patriotic is not that bad to compare with other three - Isn't it?

--

Lets have a few mins of flashback -
Hope we all remember the internal problems that we faced for years and years in the history.. and even now in some cases. To point out those internal problems clearly - Race, Caste and Religion..

Today, Racism exists only in the school lessons and most of the current generation never experienced it in the recent past. All the credits goes to the rightly called 'leaders' who did a real good job to vanish it completely from our society. This is real good news becoz we had one less problem in bringing people together. This is kind of great achievement for a developing country..

Next, we will talk about Caste systems. It is the right time where we understood the importance of removing it from our society. We do not need to argue about its pros and cons. In fact, we have learnt enough about it's negative impacts on the people unity from various happenings.
Those were painful days when we had stuck in the home/school for the entire day because of sudden clashes between two different groups. Perhaps, most of the times, the exaggeration of individual's disputes had been the root of these clashes.
btw, the situation is much improving day-by-day and we have almost attained an important milestone by erasing the caste from individuals' Name. Hopes are high to completely vanish it from our society in coming years.

Religion is another big question while talking about internal problems. We are yet to travel a bunch of generations to get comfort level in this area. At present situation, everyone of us has drawn a boundary around us and we don't ever allow anyone else to breach the boundary.
btw, we are not going to argue whether religion is good or bad.
[In fact, I myself had insisted to follow the religion for various good reasons - in my first post.]
But one thing which we need to agree within ourselves is - Not to disturb others' belief..
I guess, most of us already learnt it and we just need to pass it to next generation..

Why are we talking about all these? It's becoz we all know that society is highly sensitive for these three things and when this sensitivity is misused by criminals, it creates a huge problem.
In fact, these criminal acts too should be considered as terror incidents. Lets link these factors with Terrorism in broader perspective..!

Lets take a deep breath and we will continue here to derive the solution for the subject.

We realized the benefits when we break the disparity in races, castes and religions. So it's clear that we can reap benefits when we start removing the differences among us.
Why can't we try removing the differences among people across the border?

In today's situation,
If we two individuals are fighting in the street, we are not trying to make it a caste dispute or religion clashes.
Perhaps, we are trying to avoid those disputes and not encouraging them to proceed..
But when it comes to dispute between countries, we don't try to avoid the problems, instead we start loading the bullets.. and by default the military budget gets doubled..
We are not arguing whether this approach is right or wrong. But this is what our mindset is..

With a positive thinking approach, Lets think about how we managed to solve the caste/religion problems.
In history, we had seen people choosing the violence for resolving the local disputes. Did that ever helped?
The violence never helped and can never help to bring the dispute to an end, instead it actually fuels the dispute and makes it a never ending one.

We should start applying lessons that we learnt in our lifetime & from the history, for solving the problems across borders. Military action is never going to help to find the ultimate solution, Perhaps it is going to increase the discomfort and we might end up having more terror attacks.
So, if military is not the answer, what else could be the solution?

well.. Love and Friendship!
Wait.. we are NOT going to discuss about the world peace and spreading the peace everywhere..
Let us quickly go through few practical scenarios to compare..

When different set of people get a chance to live together in a same place, they started understanding each others' custom and their habits. We learn to adjust with others and we learnt to respect others.
So, hats off to urbanization!
[Though I don't support the urbanization for various reasons, I strongly support it for providing opportunity to get to know each other.. The more we get introduced to others, the more we understand people and their customs.]

Another very interesting factor is Love marriages!!
Love marriages are contributing differently on this topic. Both ways - towards and against!
Few years back, when a love marriage involved two different parties, it always resulted in problems between families, backed by castes/religion groups. Love marriages were seen as troublesome event and no one liked to think otherwise.
But we, the current generation, slightly changed the show and people now started accepting the love marriages. At the least to expect, love marriages are not always creating problems among parties and it is no more seen as a troublesome event.
Though we are not 100% ready to accept the mixture of cultures, it is a good start and we can expect the next generation to drive it towards the must-needed 100% acceptance.

Friendship among folks & families from different parties is also contributing to ease the disputes among them. The schools and colleges are completely erasing the differences among the new generation.
This is contributing more and more to reduce the gaps among caste/religions and to bring people together by breaking the barriers.

Back to Patriotism -
Why do we always treat 'patriotism' only for fighting with other nations? Why don't we ever try to build friendship among families across countries? Why we are not ready to encourage love marriages across LoC?
Becoz we feel bad about it.. Our mind/heart are not accepting it.. is that correct?

Exactly..! this is how our ancestors went against love marriages across castes and religions. Their mind/heart never accepted the love marriages..
If we believe that they did a mistake, then we should also realize that we are also doing the same mistake by not accepting love across countries.

If we realize that urbanization helped us to remove differences within us, why not globalization can help us to remove differences among human beings around this world?

We should create an environment where students from multiple countries get into a common place and come out without differences. We should create a friendly environment by bringing different families together and by encouraging the share of love and friendship across the countries. And so on..
And the ultimate aim is to bring everyone together and let them understand and respect each other.
If this is achieved with the help of upcoming generations, then we might not require to upgrade our weapons day by day!

No differences! - No violence!! - No Terror!!!

Of course, it is not a conclusion but an opinion!


Enjoy the life,
Nimal.


By the way, coming to an important point -
Hope we all well understood the need for cross-country love & friendship.. Now the most important thing is - Becoming one of the role-models to the next generation.
I swear, I want to be one of those examples!!
I'm right now at United States and I'm looking for a cross-country Love.. Preferably from India! :)

Tuesday, February 14, 2012

இதுதான் காதல் என்பதா..??!

[Disclaimer: இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்கவும்]

சின்னவனா இருந்தப்பவே ஊர் சுத்த பிடிக்கும்
College cut அடிச்சுட்டு லோ லோனு சுத்திருக்கேன்
அதனாலேயோ என்னவோ..
ஊர் சுத்தரதையே வேலையா வாங்கிருக்கேன்   
பெரிய Bank-ல  Marketing Rep வேலை -
Weight-aana pocket-aa பாத்து வேட்டு வைக்கறதுக்கு
சம்பளம் + incentives வேற..  

மதியம் உச்சி வெயில்.. 
பைக் ஓட்டிட்டு வந்து tired-ல, சாப்டலாம்னு 
அந்த முக்கு கடையில ஒதுங்கியிருந்தேன்.

First time-
உன்ன அந்த முக்கு கடையில வச்சுதான் பாத்தேன்..
கடைசியாதான் வந்த நீ..
almost அந்த time-ல சாப்ட்டு முடிச்சிருந்தேன்..

அன்னைக்கு பாத்தவுடனே, 
மனசுக்குள்ள மின்னல் அடிச்சது-னுலாம் பொய் சொல்ல மாட்டேன்.
but தோணிச்சு.. பாத்தவுடனே தோணிச்சு.. 
கொஞ்சம் wait பண்ணி போகலாம்னு தோணிச்சு..
ஹோட்டல்காரன் நெனச்சிருப்பான் -
"கொட்டிகிட்டாச்சுனா கிளம்ப வேண்டியதுதானே.."
"................... ஒரு  நல்ல  item வந்துட  கூடாது.." 
".................... உக்காந்த  எடத்த  விட்டு எந்திரிக்க மாட்டானுங்க"


கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தேன்.. 
ஏதோ ஒரு difference உன்கிட்ட.. 
என்னனு புரியல.. ஆனா அது பிடிச்சிருந்தது..
அப்டியே பாத்துட்டே இருக்கலாம்னு தோணிச்சி
but எவ்ளோ நேரம்தான் சும்மா கடையில உக்காந்துட்டு  இருக்கறது
சாப்ட ஆரம்பிச்சேன்.. 
already heavyaa இருந்தும், கண்டுக்காம சாப்ட ஆரம்பிச்சேன்
அன்னைக்கு பிடிச்சிருந்தது.. 
எல்லாமே.. உன்ன அன்னைக்கு பாத்தது.. பாத்துட்டே சாப்டது.. 

இன்னும் கொஞ்ச நேரம் சாப்ட்டிருக்கலாம் 
but already bill கொண்டு வந்து வச்சு பத்து நிமிஷம் ஆச்சு 
இதுக்கு மேலயும் try பண்ணினா owner கழுத்த சேத்து.. 
வேணாம் விட்ரலாம்.. போதும்.
மனசே இல்ல கிளம்பறதுக்கு ..
மறுபடியும் உன்ன எப்டியாவது try பண்றதுன்னு, 
முடிவு  பண்ணிட்டு கிளம்பினேன் ..

அன்னையிலருந்து தினமும் வருவேன்.. 
evening  office முடிஞ்சதும் நேரா, 
அந்த கடை முன்னாடிதான் நிப்பேன்..
but ஒரு நாள் கூட அதுக்கப்றம் உன்ன அங்க பாக்க முடியல..

ஒரு நாள்.. விரக்தியின் உச்சத்துல, 
யார்டயாவது விசாரிச்சுடலாம்னு decide பண்ணேன்.
ஹோட்டல்ல இருக்கற பையன 
மளிகை கடையில வச்சு பிடிச்சேன்..
உன்ன பத்தி அடையாளம் சொல்லி கேட்டேன்.. 
அவனுக்கு சரியா புரியல..
ரொம்ப நேரம் explain  பண்ணேன்.. 
but அவன் ஒரு வார்த்தை கூட பேசல

அவன சொல்லி குத்தமில்ல.. 
அவன் கடையில daily கலர் கலரா items வந்து போகும்.. 
அவனுக்கு எல்லாமே ஒரே மாதிரிதானே.. 
specific-aa கேட்டா அவனுக்கு எப்டி தெரியும்?

இருந்தாலும், 
தெரியாதுனாவது சொல்லிருக்கலாம்
ஒரு வேளை.....  
அவன் ஊமையா??

Life-la எதையோ miss பண்ணிட்டமோ-னு நெனச்சி குழப்பமா உக்காந்தப்போ..
அந்த மளிகை கடையில பொட்டலம் போடுற பையன் சொன்னான் -
"அண்ணே, அந்த பையனுக்கு தமிழ் தெரியாது.."
".............. Hindi-la பேசுங்க புரியும்"
அடடே.. இது தெரியாம அவன பிடிச்சு உக்கார வச்சு,
ரெண்டு மணி நேரம் கதற கதற மொக்க போட்டுட்டேமே..

நமக்கும் Hindi-kumdhaan  ரொம்ப தூரமாச்சே..
So, என்னோட next mission - எப்டியாவது Hindi படிக்கறது..!

வீட்டுக்கு போயி -
முடிஞ்ச அளவுக்கு hindi movies போட்டு போட்டு பாத்தேன்.. ஒண்ணும் புரியல..
doordarshan-la எல்லா serials-m உக்காந்து பாத்தேன்.. கொஞ்சம் கூட புரியல..
அப்போதான் தோணிச்சு - Smart work is better than hardwork!
இவ்ளோ கஷ்ட படுறதுக்கு பதிலா..
அந்த பையனுக்கு தமிழ் கத்து குடுத்துடலாம்னு தோணிச்சி..
ச்சே.. அது இன்னும் கஷ்டம் - இல்லைனா.. 
Hindi தெரிஞ்ச யாரையாவது வச்சு adjust பண்ணலாம்னு தோணிச்சி! 

மறுபடியும் மளிகை கடை போனேன்.. 
அண்ணாச்சிய பிடிச்சி Hindi தெரியுமான்னு கேட்டேன்.. 
"radio-la cricket score கேட்டு சொல்ற அளவுக்கு தெரியும்"-னு சொன்னாரு
எனக்குள்ள ஒரு வெளிச்சம்..!! 
இது போதும்னு தோணிச்சு.. 
cricket score correct-aa கேட்டு சொல்ற அண்ணாச்சி,
உன்னையும் correct-a கேட்டு சொல்லிடுவாருனு நம்பிக்கை வந்துச்சி..!

அடுத்து எப்போ ஹோட்டல்பையன் சரக்கு வாங்க வருவான்-னு விசாரிச்சேன்..
செவ்வாய்கிழமை லீவ் போட்டுட்டு, அந்த hindiwala-va market-la மடக்கி பிடிச்சேன்
அண்ணாச்சி, Bhaiyya, அப்புறம் பாவமா நான்..
எலோரும் ரெடி - 
எங்களோட multi-language group discussion-a ஆரம்பிச்சோம்..

அண்ணாச்சிட்ட அடையாளம் சொன்னேன்..
ஒவ்வொரு வார்த்தையா translate பண்ணி 
கஷ்டப்பட்டு பேசிட்டிருந்தார் ..
first ரொம்ப smooth-aadhaan போயிட்டிருந்தது..
but, போக போக நிலைமை serious ஆகிடுச்சி..!
அந்த பையன் 1hour ரொம்ப பொறுமையா
அண்ணாச்சியோட Hindi-ய கேட்டுடிருந்தான்..
ஆனா அவர் கேட்க வந்தது புரிஞ்சவுடனே கொடூரமாயிட்டான்..
ஒரு 20mins.. பேசினான்.. விடாம பேசினான்..
ரொம்ப force-aa பேசினான்
பேசி முடிச்சுட்டு.. கெளம்பி வேகமா போயிட்டான்.

நான் exam result-ku wait பண்ற student மாதிரி,
அண்ணாச்சியோட மூஞ்சிய பாத்துடிருந்தேன்..
அண்ணாச்சி கொஞ்சம் கோபமா இருந்தாரு..
"என்ன அண்ணாச்சி? hindi-la அசிங்கமா திட்டிட்டானா?" - கேட்டேன் 
அவர் திரும்ப என்னைய திட்டி  இருந்தா கூடமன்னிச்சிருப்பேன்.. 
but அண்ணாச்சி கடுப்புல சொன்ன பதில் - 
"என்ன சொன்னான்னு புரியலையேப்பா"

எனக்கு செம்ம  கோபம் - நியாயமா நான்தானே கோபப்படணும்?
இவ்ளோ நேரம் தலையாட்டி கேட்டுட்டே இருந்துட்டு 
கடைசில ஒண்ணுமே புரியலைன்றாரு..
கோபத்த control பண்ணிக்கிட்டு கேட்டேன் -
"என்ன அண்ணாச்சி, ஒரு வார்த்தை கூடவா புரியல?"
மறுபடியும் அண்ணாச்சி கடுப்புல -
"ஏதோ 'dho baje', 'dho baje'-னு சொல்லிடிருந்தான்.. பாவிப்பய..
கடைசில சரக்கு வாங்காம போயிட்டான்"

அண்ணாச்சியோட கடுப்புக்கு பின்னாடி இருந்த reason புரிஞ்சது
அதே நேரம், எனக்கு நான் பாத்த doordarshan serial help பண்ணிச்சு..
'dho baje'-means ரெண்டு மணி..!!

உனக்கும் ரெண்டு மணிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு வேளை நீ 2 மணிக்கு இருப்ப-னு சொல்றானா???

இருக்கலாம்.. ஏன் இருக்க கூடாது??
எல்லா வழியிலயும் try பண்ணிடலாம்-னு 
நாளைக்கு correct-aa 2  மணிக்கு 
hotel போயிடலாம்னு முடிவு பண்ணேன்..

தேடல்-னு ஒண்ணு இருந்தாதானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்!!
நாளைக்கு புது நம்பிக்கையோட உன்ன தேடி வர போறேன்..
இன்னைக்கு எப்டியும் தூக்கமே  இருக்காது எனக்கு -
இந்த இரவு, கனவுகள் நிறைந்த கனத்த இரவு!

நான் ஏன் இப்டி உன்ன தேடுறேன்?
அப்டி என்ன உங்கிட்ட எனக்கு பிடிச்சது?
எனக்கே தெரியல..
நெறைய பேர பாத்திருக்கேன்.. try கூட பண்ணிருக்கேன்..

சில பேர் sweet-aa பேசுவாங்க.. பிடிக்கும்..
சில பேர் kaaram-aa முறைப்பாங்க.. அதுவும் பிடிக்கும்
but அவங்க மாதிரியே இல்ல நீ..
அந்த ஒரு difference-தான் என்ன இப்டி சுத்த விட்டுடிச்சு!

இத்தன வருஷமா life-la waste பண்ணிட்டேனோ??
உன்ன பத்து வருஷம் முன்னாடி பாத்திருந்தாலும் 
இப்டிதான் சுத்திட்டு இருந்திருப்பேனா?
ஏன் இந்த மாதிரி கேள்விகள் மனசுக்குள்ள கெளம்புது? 
இப்டியே யோசிச்சிட்டு இருக்கும்போது..
பின்னாடி FM-ல background song..... -
இதுதான் காதல் என்பதா??

ம்ம்.. இப்போதைக்கு 
அத காதல்னு சொல்ல மாட்டேன்.. 
அதற்கான தேடல்னு சொல்லலாம்!
அட.. திடீர்னு கவிஞன் மாதிரி பேசறேனா?
காதல், தேடல் - ரெண்டுமே ஒரு மனசை
easy-aa கவிதை எழுத வச்சுடுமே..!

நாளைக்கு உன்ன கண்டிப்பா பாக்க முடியுமான்னு தெரியல..
இருந்தும் என்னோட மனசு இப்பவே கெடந்து அடிச்சுக்குது
அந்த powercut ஆன night-la
வேர்வை சொதசொதப்பில
கொசுக்கடிலாம் மறந்து 
கருப்பு வானத்த
வெறிச்சு பாத்து
கவிதை வரைஞ்சேன் -

"""
   jillunu நீ 
   empty-aa நான் 
   பக்கத்துல பல-காரம்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""

எழுதி முடிச்சப்ப முழிச்சுட்டேன்..
இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சதே இல்ல
கெளம்பி tea கடை போயி, தினத்தந்தி-ல 
ராசிபலன் பேப்பர் தேடி திருப்பினேன்

என்னோட ராசி தேடி வாசிச்சேன் -
"காரியம் கை கூடும்"

tea கடை தாத்தா கிட்ட சொன்னேன் -
"தாத்தா.. உன் பேப்பர் மட்டும் correct-aa  சொல்லிச்சுன்னு வை...."
"........ நாளைக்கே உன் கணக்கு settle பண்றேன்"
  
2 மணி எப்போ ஆகும்னு காத்துட்டிருந்தேன்
கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் நடுக்கம், நெறைய பதட்டம்

சரியா 1.55 - ஹோட்டல் போயாச்சு..
Bike கண்ணாடியில personality check பண்ணிட்டு
ஜன்னல் வழியா எட்டி பாத்தேன்...

என்னால நம்பவே முடியல!
yes - நீதான்.. நீயேதான்..
தினமும் 2  மணிக்கு இங்க இருப்பியா?
இப்டின்னு தெரிஞ்சிருந்தா 
மொத்த office-ayum 
இங்க மாத்திருப்பேனே!

எப்டி ஆரம்பிக்கலாம்?
போதும். wait பண்ணினது போதும்..
இதுக்கு மேல wait பண்ண முடியாது..
நேரா போயி கேட்டுட வேண்டியதுதான்..

நேரா போயி seat புடிச்சு உக்காந்துட்டேன்
கொஞ்ச நேரம் straight-aa உன்னையே பாத்துடிருந்தேன்
WAIT ----  யார் அவன், உன் பக்கத்துல?
நான் உன்ன பாத்தா அவனுக்கென்ன? ஏன் மொறைக்கிறான்?
Hmm.. என்ன நடந்தாலும் பாத்துடலாம்.
பாத்துட்டே இருந்தேன்..

அந்த முரட்டு பேர்வழி ஹோட்டல்காரன கூப்ட்டு
ஏதோ காதுக்குள்ள சொன்னான்..
ஹோட்டல்காரன் என்னை வெறிச்சு பாத்தான்
நான் அதையெல்லாம் கண்டுக்கல..
விடாம உன்னையே பாத்துட்டே இருந்தேன்

ஹோட்டல்காரன் நேரா என்கிட்டே வந்தான்..
பக்கத்துல வந்து, "என்ன வேணும்"-னு கேட்டான்..

எங்க இருந்து எனக்கு இவ்ளோ தைரியம் வந்ததோ தெரியல..
நேரா உன்ன பாத்து கைய காட்டினேன்  -


....
...
...


அங்கே ஒரே அமைதி -

ஹோட்டல்காரன் திரும்பி
சிரிச்சிக்கிட்டே சத்தம் போட்டு சொன்னான்..
'bhaiyaa.. sir-ku தயிர்சாதம்..'

அடடா.. உன்னோட பேர் "தயிர்சாதம்"!!! 
பேர் கேட்ட உடனே எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு..
எனக்கு பேர் ரொம்ப பிடிச்சிருந்தது!!

சத்தம் போட்டு கேட்டேன் -
"அப்டியே.. கொஞ்சம் ஊறுகாய் சேத்து கொண்டு வாங்க"

என்னோட "தயிர்சாதம்" தேடல், ஒரு முடிவுக்கு வந்திச்சு!
எனக்கு கனவுல எழுதின கவிதை ஞாபகம் வந்தது..

"""
   jillunu நீ
   empty-aa நான்
   கொஞ்சம் ஊறுகாய்
   இது மட்டும் போதும்
   Tuk-nu FOREIGN SONG-தான்!!
"""
இதுதான் காதல் என்பதா..??!
Happy Valentines Day!! 

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்

Sunday, January 1, 2012

சாமி-ய பிடிக்கல [short story]


நாளைக்கு பிறந்தநாள்.. மறுபடியும் அந்த நாள் வர போகுது..
போன வருஷம் எடுத்த புது சட்டைதான் இப்போ நான் போட்டிருக்கறது..
Trouser-la ஒரு பொத்தான் மட்டும் விழுந்துடிச்சு.. அதை எடுத்து பாக்கெட்-ல போட்டு வச்சிருந்தேன்.. இப்போ கொஞ்ச நாளா அதையும் காணோம்..

போன பிறந்தநாளைக்கு பள்ளிக்கூடம் போகல.. அப்போ சேத்துவிடல..
நாலு வயசுக்கு அப்றம்தான் பள்ளிக்கூடம் சேர்க்கணும்னு வாத்தியார் சொல்லிட்டாரு.. அதனால வீட்லதான் இருந்தேன்..

பச்சை கலர் புதுசட்டை, அதே கலர்-ல trouser..
எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. இருந்தாலும் நான் கேட்ட வெள்ளை சட்டை, காக்கி trouser வாங்கி தரலை..
பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் வாங்கி தர்றதா சொல்லிட்டாரு அப்பா..
பக்கத்து வீட்டு ராஜு-வும் வினோத்-ம் தினமும் அதுதான் போடுறாங்க.. எனக்கு பாக்கும்போது ஆசையா இருக்கும்.
---

வீட்ல வெளிய உக்காந்து, சோத்து மணி அடிக்கற வரைக்கும் காத்துட்டு இருந்தேன்.. ராஜு, வினோத் கிட்ட புது சட்டைய காட்டுறதுக்கு..

ராஜு பாத்தவுடனே கேட்டான் - 'என்னடா கலக்கற.. புது சட்டையா ?'
'ஆமா.. இன்னைக்கு பொறந்தநாள்-டா.. நேத்து அப்பா டவுன் போயி வாங்கிட்டு வந்தாரு'
'பொறந்த நாள்னா chocalate தரனும்டா.. வச்சிருக்கியா?' - ராஜு கேட்டான்..

.... அடடா.. இது தோணவே இல்லையே-னு யோசிச்சுட்டே சொன்னேன் -

'ம்ம்ம்ம்..  நீ போன வாரம் வாங்கின ரப்பர் திரும்ப தரவே இல்ல.. அதுக்கு கழிச்சுக்கோ..'

ராஜு எதுவும் பேசாம வீடுக்குள்ள போயிட்டான்..
வினோத் chocalate இல்லைன்னு தெரிஞ்சு, முன்னாடியே வீடுக்குள்ள சாப்பிட போயிட்டான்..

..ம்ம்.. அடுத்து சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கணும் மத்த பசங்க கிட்ட சட்டை காட்டுறதுக்கு..
என்ன பண்றது அது வரைக்கும்?

வீட்ல எப்பவும் பாட்டி கூடயும் தங்கச்சி கூடயும்-தான் பொழுதன்னைக்கும் இருப்பேன்..
தங்கச்சி என்ன சொன்னாலும் தொட்டில்ல இருந்து குறு குறுன்னு பாத்துட்டே இருப்பா..
பாட்டிட்ட ஒரு நாளைக்கு பத்து தடவையாவது இதே கேள்விய கேட்பேன்.. -
'தங்கச்சி எப்போ பாட்டி என்கிட்டே பேசும்?'
பாட்டியும் ஒவ்வொரு தடவையும் சளைக்காம பதில் சொல்லும் - 'அடுத்த வருஷம் வாயாடியா பேசும்டா..'

பாப்பாவ ஆசையா தொட்டு தொட்டு பார்த்துப்பேன்.. அவதான் நான் தொட்டாலே அழ ஆரம்பிச்சுடுவா..
இதுக்காகவே அம்மா நல்லா என்னைய திட்டி விட்டுடும்..

பாட்டிக்குதான் நான் செல்லபிள்ளை.. அம்மாவ பொழுதன்னைக்கும் திட்டிட்டே இருக்கும்.. ஆனா என்னைய திட்டவே திட்டாது..
ரொம்ப நல்ல பாட்டி.. எனக்கு எப்பவும் அதுதான் காசு குடுக்கும்.. அம்மாக்கு தெரியாம பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கிட்டு வந்து தருவேன்..
பாட்டிக்கு ரோஜா மிட்டாய்னா ரொம்ப இஷ்டம்.. பல்லு இல்லைனாலும் விடாம சாப்பிடும்..
அது சாப்டுட்டு நாக்க வெளிய நீட்டி காட்டும்.. யார் நாக்கு நல்லா சிவக்குதுன்னு ஒரு போட்டி.. நான்தான் எப்பவும் ஜெயிப்பேன்!

போன பிறந்த நாளைக்கும் இப்டிதான்.. புது பச்சை சட்டை போட்டுட்டு பாட்டி கால்ல விழ சொல்லிச்சு அம்மா..
நான் போயி பாட்டி பக்கத்தில உக்காந்தேன்..
பாட்டி என் தலையில கை வச்சு வாய்க்குள்ள ஏதோ முனுமுனுத்துச்சி.. எல்லா பிறந்த நாளுக்கும் இப்டிதான் பண்ணி விடும்!
அப்புறம் சுறுக்கு பையிலஇருந்து காசு எடுத்து குடுக்கும்..
அன்னைக்கு எப்பவும் குடுக்கறதவிட 5 காசு ஜாஸ்தியா 15 ஜாஸ்தியா குடுத்திச்சு.. ரொம்ப ஜாலியா பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கி குடுத்தேன்..

அன்னைக்கு பாட்டி என்ன நெனச்சதோ தெரியல.. கைல வாங்கிட்டு ரொம்ப நேரம் சாப்பிடாம பாத்துட்டே இருந்தா..
நான் ஒவ்வொரு மிட்டாய முடிச்சுட்டு பாட்டிகிட்ட நாக்க நீட்ட சொல்லுவேன்.. ஆனா பாட்டி அன்னைக்கு முழுசும் அதை சாப்டவே இல்ல.. சாயங்காலம் என்னை கூப்பிட்டு தலைய தடவி கேட்டிச்சு -'பாட்டிக்கு பெரிய ஆளாகி என்னடா வாங்கி தருவ?'
'நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தரேன் பாட்டி' - பளிச்சுன்னு சொன்னேன்
பாட்டிக்கு கண்ணுல தண்ணியா வந்துச்சு..
-----

இன்னைக்குதான் அம்மா ஞாபகப்படுத்திச்சி.. நாளைக்கு உனக்கு பிறந்தநாள்-னு..
மறந்தே போச்சு.. இந்த தடவை அப்பாட்ட என்ன கேக்கறது-னு ரொம்ப நேரம் யோசிச்சிட்டே இருந்தேன்..

போன தடவை மாதிரி இல்ல.. நிறைய நிறைய மாறி போச்சு..
பள்ளிக்கூடம் சேந்துட்டேன்..
பாப்பா கொஞ்சம் வளந்துட்டா..  'ம்மா', 'ப்பா'-லாம் சொல்றா! என்கிட்டே அழறதே இல்ல.. நான் பேசினா சிரிக்கிறா..
பாட்டி இப்போலாம் வீட்லயே இல்ல.. ஆஸ்பத்திரில தூங்கிகிட்டே இருக்கு.. நெறைய பேசறது இல்ல..
'வீட்டுக்கு எப்போ பாட்டி வருவ'-னு கேட்டுட்டே இருக்கேன்.. பாட்டி பதில் சொல்லவே மாட்டேங்குது..
அம்மாவும் 'பாட்டிய தொந்தரவு பண்ணாத'-னு சொல்லிடிச்சு

காலைல எந்திரிச்சி குளத்துக்கு போயிட்டு வந்ததும்.. அப்பா பீரோ-லருந்து புது ட்ரெஸ்ஸ எடுத்து குடுத்தாரு..
புது வெள்ளை சட்டை காக்கி trouser ..! எனக்கு புடிச்சிருந்தது..!

அம்மா கூப்பிட்டு சாமி முன்னாடி விழுந்து கும்பிட சொன்னாங்க..

இது என்ன புது பழக்கம்? எனக்கு பாட்டி ஞாபகம் வந்துடிச்சு..
நான் பூஜை ரூம்ல எட்டி பாத்தேன்.. பாட்டி மாதிரி இல்ல இந்த சாமி..

சாமி அமைதியா நின்னுடிருந்தது.. நான் வந்தத கவனிக்கவே இல்ல..
நான் மெதுவா சிரிச்சேன்.. ஒன்னும் சொல்லல..
'சாமி..' கூப்டேன்.. ஒன்னும் சொல்லல..
கொஞ்சம் குனிஞ்சு நின்னேன்.. தலையில கை வச்சு எதுவும் சொல்லல..
அதுகிட்ட சுறுக்கு பையும் இல்ல..
கடைசி வரைக்கும் என்னை பாத்து சிரிக்ககூட இல்ல..
சாமி ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சுது..

அம்மாட்ட காசு கேட்டு வாங்கினேன்.. ராஜு-க்கும் வினோத்-க்கும் chocalate வாங்கி குடுக்கணும்-னு யோசிச்சு, அதுக்கும் சேத்து 30 காசு வாங்கிட்டு கடைக்கு போனேன்..
என்ன chocalate வாங்குறது-னு தெரியாம முழிச்சிக்கிட்டே ரோஜா மிட்டாயே வாங்கினேன்..
இந்த தடவை கடைக்கார தாத்தா புது சட்டைய பாத்து வழக்கமா குடுக்கறத விட நெறைய மிட்டாய் குடுத்தாரு.. கை நிறைய ரோஜா மிட்டாய்!
பாட்டிட்ட சொன்னது ஞாபகம் வந்தது.. பெரிய ஆளாகி நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தர்றதா சொல்லிருந்தேன்..
இப்போ இத குடுத்தா நெறைய சந்தோசப்படும்!


நேரா வீட்டுக்கு போனேன்.. ராஜு-கும் வினோத்-கும் மிட்டாய் குடுத்தேன்..
'என்னடா chocalate வாங்கலையா?' - ராஜு கேட்டான்
'எங்க பாட்டிக்கு ரோஜா மிட்டாய்தான் வாங்க சொல்லிச்சு'
..ம்ம்.. கொஞ்சம் யோசிச்சுட்டு..  'அப்போ எனக்கு ரெண்டு குடு..'-னு கேட்டு வாங்கிகிட்டான்
புது வெள்ளை சட்டை பத்தி அவன் கேக்கவே இல்ல.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி..

வீட்டுக்கு ஓடி போயி அம்மாட்ட கேட்டேன் - 'பாட்டிய எப்போம்மா போயி பாக்கலாம்?'
'நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்'
'இன்னைக்கு போலாம்மா.. நான் பாட்டிட்ட புது சட்டைய காட்டிட்டு மிட்டாய் குடுக்கனும்மா.. '
'பாட்டிகெல்லாம் குடுக்க வேணாம்..  உள்ள பூஜை ரூம்ல சாமிக்கு வை'

சாமிக்கு எதுக்கு ரோஜா மிட்டாய்?-னு கோபமா வந்தது..
மெதுவா போயி சாமி முன்னாடி மிட்டாய் வச்சேன்.. கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்தேன்..
'சாப்பிடு சாமி' - சொன்னேன்..  சாமி ஒன்னும் சொல்லல..
இது எப்பவும் இப்பிடிதான் அடம்பிடிக்கும்.. எதையும் சாப்பிடாது.. அம்மா இதுவரைக்கும் குடுத்த எதையும் சாப்ப்டதே இல்ல..
பாட்டியா இருந்தா சாப்டுட்டு நாக்கெல்லாம் காட்டும்-னு நெனச்சிகிட்டு, மிட்டாய திரும்ப எடுத்து பாக்கெட்ல போட்டுகிட்டேன்!

பாப்பா நல்லா தூங்கிடிருந்தா.. தொட்டில்ல எட்டி பாத்தேன்.. சேலைய ஈரம் பண்ணிட்டு அதுலயே தூங்கிட்டிருந்தா..
'குட்டீ' - கூப்பிட்டேன்!
சூப்பரா சிரிச்சுட்டே.. காலை உதைச்சி..  'ண்ணே'-னு சொன்னா..!
ஒரே ஆச்சர்யம்! முதல் முறையா என்னை 'ண்ணே'-னு கூப்டிருக்கா..!
பாட்டிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. எப்போ என்கிட்ட பேசுவா-னு..
இன்னைக்கு பேசிட்டா!
பாட்டி திண்ணை பக்கம் திரும்பி சத்தம் போட்டு சொன்னேன் -
'பாட்டி.. பாப்பா என்கிட்ட பேசறா பாட்டி..'

பாட்டிதான் வீட்ல இல்லையே.. பாட்டி இருந்த எடத்துல இப்போ சாமி போட்டோ மட்டும் அம்மா மாட்டி வச்சிருக்கு..  அந்த சாமி போட்டோ எதுவும் கண்டுக்காம காத்துல ஆடிட்டே இருந்திச்சு..

'என்ன சாமிடா இது'-னு திட்டிட்டு..  பாட்டிகிட்ட மறக்காம நாளைக்கு சொல்லணும்-னு நெனச்சிக்கிட்டு பாப்பாக்கு கன்னத்தில முத்தம் வச்சேன்.. சிவப்பாயிட்டா பாப்பா - வாயில இருந்த கலர் ஒட்டிகிச்சு! :)

எப்போ பாட்டிய பாக்கறதுன்னு ஒரே கவலையா இருந்துச்சு.. நாளைக்குதான் கூட்டிட்டு போவேன்-னு அம்மா சொல்லிடுச்சி..
பள்ளிக்கூடம் வேற போகணும் இன்னைக்கு.. முதல் மணி அடிச்சுட்டாங்க.. சீக்ரம் போகணும்.. இல்லைனா வாத்தியார் காப்பி வாங்கிட்டு வா-னு அலைய விட்டுடுவாரு..

ஒரே கவலையா உக்காந்திருந்தேன்.. எப்போடா பள்ளிக்கூடம் முடியும்னு காத்துட்டிருந்தேன்..

சோத்து மணி அடிக்கரப்போ அம்மா அவசரமா பள்ளிக்கூடம் வந்தாங்க..
வாத்தியார் கிட்ட ஏதோ பேசினாங்க..
பேசிட்டு நேரா எங்கிட்ட வந்தாங்க - 'பை எடுத்துக்கடா.. போகலாம்..'
'எங்கம்மா..?'
'ஆஸ்பத்திரி போகலாம்.. பாட்டிய பாக்க போகலாம்'

எனக்கு ஒரே குஷி.. இன்னைக்கே பாட்டிய பாக்கலாம்!
பாக்கெட்ல இருக்கற மிட்டாய் பொட்டலத்த தொட்டு பாத்துகிட்டேன்!
அம்மா கூட அவசரமா குதிச்சு குதிச்சு நடந்தேன்..

பஸ்ல போகும்போது அம்மா பேசவே இல்ல..

ஆஸ்பத்திரில நெறைய பேர் இருந்தாங்க.. பாட்டி தூங்கிட்டு இருந்துச்சி..
பக்கத்துல போயி கூப்டேன்...
'பாட்டி... பாட்டி..' - நாலு தடவை கூப்ட்டேன்
பாட்டி பேசவே இல்ல..
'ம்மா.. ஏம்மா பாட்டி பேசவே மாட்டேன்றாங்க?' - கேட்டேன்..
'பாட்டி பேசாது.. பாட்டிய சாமி கூப்டுகிட்டாங்க..'

எனக்கு புரியல.. ஆனா பெரிய கோபம் வந்துடுச்சி சாமி மேல..
சாமிய எனக்கு சுத்தமா பிடிக்காம போச்சு..

பாக்கெட்ல இருந்த ரோஜா மிட்டாய எடுத்து பாட்டி முன்னாடி காட்டினேன்.. எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சி..


Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer