ரொம்ப தெரிஞ்ச பையன் ஒருத்தன், ரொம்ப நாள் கழிச்சு சமீபமா பார்த்து பேசிட்டிருந்தேன்..
எல்லோரும் college -ல project பண்ணியிருப்போம்.. ஆனா இது interesting -ஆன school - project !! :)
கேள்வி: பச்சை-சிவப்பு combination ஒத்து போகுமா?
இந்த கேள்விக்கு பதில்-தான் நீங்க வாசிக்க போறது! கொஞ்சம் 20 வருஷம் பின்னாடி போயிக்கோங்க.......!
==== ===== ====== ====== ====== ======
ஒண்ணு மட்டும் புரியல அன்னைக்கு..
leave -விட்டும் cricket விளையாடாம எதுக்கு நான் special class போகணும்?
அப்டியே எல்லோரையும் sir வரசொன்னாலும் ஏன் time சொல்லாம வர சொல்லணும்?
காலைல-ன்னு பொதுவா sir சொன்னாலும் நாங்க நாலு பேர் மட்டும் ஏன் சீக்கிரமா போயி சேரணும்?
இதெல்லாம் கூட OKAY.. ஆனா நாங்க எல்லோரும் வந்ததுக்கு அப்புறமா ஏன் late-ஆ அவ வரணும்?!
--
School Bus விட்டு இறங்கி ஒரு tea -ய போட்டுட்டு class போகலாம்னு
ஓரமா உக்காந்து paper படிச்சிட்டிருந்தோம்..
அங்கதான் first scene -
அங்கதான் first scene -
அப்படியே cinema -ல வர்ற மாதிரிதான் - காத்தடிச்சு paper தானா பறந்துடுச்சி..
சரி எடுத்துட்டு வந்துடலாம்-னு போனா.. தூரத்துல பச்சை தாவணி..
அவ-தான் அவளே-தான்..!
உங்களுக்கு தெரியாது அவளை.. ஆனா எனக்கு 5 வருஷமா தெரியும்!
உங்களுக்கு தெரியாது அவளை.. ஆனா எனக்கு 5 வருஷமா தெரியும்!
எப்போதையும் விட இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசம்.. ஏன்னா uniform இல்ல சனி-ஞாயிறு!
வேற color dress -ல ரொம்பவே வித்தியாசமா இருந்தா..!
பச்சையும் சிவப்பும் பத்தி கேள்வி கேட்டேனே.. உங்க கிட்ட?
அன்னைக்குதான் முதல்ல ஆராய்ச்சி ஆரம்பிச்சது!
அன்னைக்குதான் முதல்ல ஆராய்ச்சி ஆரம்பிச்சது!
அவளோட பச்சை dress -க்கு matching -ஆ அந்த ரெட்ட சட..
அதுக்கு matching -ஆ அழகா ஒரு சிவப்பு ரோஜா
இதுவரைக்கும் பாத்ததில்ல அந்த மாதிரி அவள
சரியா கடைய cross பண்றப்ப, என்ன ஆச்சுனு தெரியல - அவ என் பக்கமா திரும்பினா
சரியா கடைய cross பண்றப்ப, என்ன ஆச்சுனு தெரியல - அவ என் பக்கமா திரும்பினா
'பகீர்'-னுச்சு உள்ளே.. 'நான் பாத்தத பாத்துட்டாளோ'-னு ஒரு பதட்டம்
கொஞ்சம் நிதானத்துக்கு வந்து மெதுவா திரும்ப பார்த்தா.., அவ என்னை பாக்கல..
பக்கத்தில இருந்த கோயில் சாமிக்கு கன்னத்தில போட திரும்பிருக்கா..!
இது தெரியாம கொஞ்சூண்டு பயத்த waste பண்ணிட்டேன்.. ம்ம்ம்
கொஞ்சம் நிதானத்துக்கு வந்து மெதுவா திரும்ப பார்த்தா.., அவ என்னை பாக்கல..
பக்கத்தில இருந்த கோயில் சாமிக்கு கன்னத்தில போட திரும்பிருக்கா..!
இது தெரியாம கொஞ்சூண்டு பயத்த waste பண்ணிட்டேன்.. ம்ம்ம்
Paper படிக்கிற சாக்குல.., இந்த தெரு கடைசில இருந்து அந்த கடைசி வரைக்கும்..
பார்வையிலேயே அவள துரத்தி முடிச்சுட்டு திரும்பினா..
கைல tea glass -ஓட பசங்க அம்புட்டு பேரும் silent -ஆ அதே வேலைய பண்ணிடிருந்தானுங்க!
உள்ளுக்குள்ளேயே திட்டிகிட்டு, tea -க்கு காசு குடுத்தேன்..
அப்போதான் தோணிச்சு - இன்னைக்கு ஏதாவது அவகிட்ட பேச try பண்ணலாமா?!
இதுவரைக்கும் அந்த தைரியம் வந்ததில்ல.. ஆனா அப்போ தோணிச்சு..!
சிந்துபாத் கதைய கூட பாதியில விட்டுட்டு அவசரமா கிளம்பினேன்..
யோசிச்சுட்டே சீக்கிரமா நடந்தேன் school -அ பாத்து..
என்ன பேசலாம்?
"bus -லயா வந்த?"-னு ஆரம்பிக்கலாமா?
"extra பேனா இருக்கா?"-னு கேட்டு பாக்கலாமா?
"monthly test -க்கு படிச்சிட்டியா?"-னு கேக்கலாமா?
இல்ல.. "dress நல்லா இருக்கு"-னு நேரா சொல்லிடலாமா?
safe idea - "class எப்போ ஆரம்பிக்கும்?"-னு கேட்டுடலாம்னு decide பண்ணினப்போ..
school வந்துடிச்சி.. அதோ ஜன்னல்-ல அவ dress தெரியுது..!
class பக்கத்துல போனதுக்கப்புறம்தான் light -ஆ ஒரு பயம் மனசுக்குள்ள..
அது எப்டி காலுக்கும் கைக்கும் தெரிஞ்சதுனு தெரியல.. 'குப்'-னு வேர்த்துடிச்சி!
class -க்கு வெளிய நின்னு அந்த ஒரு-வரி-கேள்விய எப்டி அவகிட்ட கேக்கலாம்-னு ஒத்திகை பார்த்துட்டிருந்தேன்..
இப்படி அப்படி-னு ஒரு வழியா பதிமூனாவது தடவை -
ஒரு மாதிரி சும்மா casual -ஆ கேட்கிற மாதிரி கேக்கலாம்-னு settle ஆச்சு..
முடிவு பண்ணிட்டு தைரியம் எல்லாத்தையும் தேத்திகிட்டு class உள்ளே போனா..
உள்ள இருந்து sir குரல் - "காலைல கிளம்பி class -க்கு வாங்கடா-ன்னா tea கடையில உக்காந்து அரட்ட அடிக்கறீங்க??"
மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு தடவை முறைச்சிட்டு உள்ள போக சொன்னாரு..
எல்லா plan -னும் சொதப்பிடிச்சேன்னு கவலையில போயி உக்காந்தேன்..
அப்புறம் என்ன? sir அவருக்கு சம்பளம் இன்னும் தரலையே-ன்ற கடுப்புல class எடுத்துட்டு இருந்தாரு!
நான் முடிஞ்ச அளவுக்கு தூக்கத்த தள்ளி போட try பண்ணிட்டிருந்தேன்..
முதல் கொட்டாவிய அளந்து அடக்கி விட்டுட்டு - திரும்பினப்பதான் கவனிச்சேன் - ஜன்னல் எனக்கு நேரா..
என்ன? "வேடிக்கை பாக்கலாம்"-னு சொல்றீங்களா?
இல்லீங்க.. அந்த ஜன்னல் பக்கத்துலதான் அவ உக்காந்திருந்தா!
என்னோட ஆராய்ச்சிய continue பண்ணினேன்!
அடுத்து என்ன பண்ணலாம்-னு யோசிச்சுக்கிட்டே master-plan போட்டேன்..
பேனா-வ கீழ போடுற மாதிரி sound குடுத்து அவள திரும்ப வைக்கிறது-தான் திட்டம்
=== ==== ===== ===== ===== ==== ==== === ==== ===== ===== ===== ==== ====
நான் முடிஞ்ச அளவுக்கு தூக்கத்த தள்ளி போட try பண்ணிட்டிருந்தேன்..
முதல் கொட்டாவிய அளந்து அடக்கி விட்டுட்டு - திரும்பினப்பதான் கவனிச்சேன் - ஜன்னல் எனக்கு நேரா..
என்ன? "வேடிக்கை பாக்கலாம்"-னு சொல்றீங்களா?
இல்லீங்க.. அந்த ஜன்னல் பக்கத்துலதான் அவ உக்காந்திருந்தா!
Ok then , நம்ம வேலைய பாப்போம்-னு அந்த பக்கமா திரும்பினேன்..
அந்த பச்சை-சிவப்பு combination -அ இன்னும் நம்ப முடியாமஎன்னோட ஆராய்ச்சிய continue பண்ணினேன்!
அடுத்து என்ன பண்ணலாம்-னு யோசிச்சுக்கிட்டே master-plan போட்டேன்..
பேனா-வ கீழ போடுற மாதிரி sound குடுத்து அவள திரும்ப வைக்கிறது-தான் திட்டம்
திட்டம்-லாம் super .. சரியாதான் பண்ணேன்.
ரெண்டு தடவை பேனா-வ கீழ போட்டும் பிரோயஜனம் இல்லாம போச்சு - பேனா nib ஒடஞ்சதுதான் மிச்சம்..!
அதுக்காக முயற்சிய விடலாமா? அடுத்த திட்டம் - "இருமல் + செருமல்"!
ஆனா அது இன்னும் மோசமா முடிஞ்சிடுச்சி -
அவள தவிர class -ல எல்லோரும் திரும்பி பாத்தாங்க, sir -ம் சேர்ந்து :(
முயற்சி எல்லாம் தோல்வி-ல முடிஞ்சி என்னடா பண்றது-னு நகத்தை கடிச்சிட்டிருந்தப்போ..
சொன்னா நம்ப மாட்டீங்க - அது நடந்தது!
'என்ன? - அந்த பொண்ணு திரும்பி பார்த்தாளா'-னு கேட்கறீங்களா?
அதான் இல்லை.. கதை வேற மாதிரி போயி முடிஞ்சுது!
திடீர்னு அவ class -ல எந்திரிச்சி நின்னு sir -அ கூப்பிட்டா..
என்னடா-னு பார்த்தா - அவளுக்கு பேனா-ல ink தீர்ந்து போச்சு.. extra பேனா யார்ட்டயாவது இருக்கானு கேட்டா..!
அட.. இப்படி ஒரு சந்தர்ப்பமா-னு சந்தோஷத்துல கையை தூக்கிட்டேன்..
"வாங்கிக்கோ-மா"-னு சொல்லிட்டு, Sir board -க்கு போயிட்டாரு..
அவ என் பக்கத்துல வந்து நின்னு கையை நீட்ட -
[ பக்கத்துல இருந்து பார்த்தத வச்சு மறுபடியும் சொல்றேன் - பச்சையும் சிவப்பும் செம்ம combination !! ]
இப்போ விட்டா அப்புறம் எப்போ பேசறது?
நான் ஏதாவது பேசிடலாம்னு வாயை திறந்து ஒரு வார்த்தை வெளிய வர்றதுக்குள்ள..
என்னோட கையில இருந்து பேனாவ வாங்கிட்டு ஓடியே போயிட்டா!
ஆனா அங்கயும் ஒரு twist -
அடுத்த பத்தாவது நொடி அவ என்ன திரும்பி பார்த்தா..!
உண்மைய சொல்லணும்னா 'முறைச்சா - கண்ணுலேயே எரிச்சா'.. :(
ஏன்-னு தெரிஞ்சதா உங்களுக்கு? - எனக்கும் late -ஆதான் புரிஞ்சது
பந்தா காட்டுனதுல பேனா nib முன்னாடியே ஒடஞ்சி போச்சே!
அன்னைக்கு அவ பண்ண ஒரே நல்ல காரியம்.. அந்த matter -அ sir -கிட்ட சொல்லாம இருந்ததுதான்!
அப்படி மட்டும் சொல்லிருந்தா, அவ்ளோதான்..
எழுதாத பேனா-வ குடுத்தது + எங்கிட்ட வேற பேனாவே இல்லாதது + இது வரைக்கும் நான் notes -ஏ எடுக்காதது -
எல்லாமே தெரிஞ்சிருக்கும்! நல்லா வாங்கி கட்டிருப்பேன்! -
ஆனா அன்னைக்கு அவ அப்படி பண்ணலை..!
அதானாலதான் இப்பவும் சொல்றேன்:
"ரெட்ட சட, சிவப்பு ரோஜா, பச்சை தாவணி' - ஒரு நல்ல combination !
இது வரைக்கும் நான் அவகிட்ட சொல்லலைனாலும்
உங்க கிட்ட இப்போ சொல்றேன், கேட்டுகோங்க:
எந்த ரெண்டு colors எதிரும் புதிருமா இருந்தாலும் -
அதை போடவேண்டியவங்க போட்டு
அதை பாக்கவேண்டியவங்க பார்த்தா
கண்டிப்பா இந்த கேள்வியே இல்ல!
=== ==== ===== ===== ===== ==== ==== === ==== ===== ===== ===== ==== ====
அவன் சொல்றது இருக்கட்டும்.. நீங்க என்ன சொல்றீங்க??
வாழ்க மகிழ்வுடன்!
நிமல்
Happy Diwali..!