தினம் தினம் ஒரு தரமாவது மொக்கை போட்டு தூங்குவது என்று
உத்திரவாதம் கொ(எ)டுத்து கொண்ட நேரம்
இன்று மட்டும் இன்னும் அழைப்பு வரவில்லையே
நாளை விசாரிப்போம் - என சிந்தனையில் தூங்கிய நேரம்
சில பல நாட்கள் ஆயிற்று அடுத்த வாரம் மறக்காமல்
கண்டிப்பாக பேசுவது - என உறுதிமொழி எடுத்த நேரம்
வாரங்கள் வந்து வந்து போனாலும், பேசி மொக்கை போட
வரும் ஞாயிறு அன்று நிமிடம் ஒதுக்கிட திட்டம் தீட்டிய நேரம்
கடைசியாக நடந்த பழைய உரையாடலின் முற்று புள்ளியை ஆராய்ந்து
கொஞ்சம் அதை முறைத்து விட்டு தூங்கிய நேரம்
இப்பொழுதெல்லாம் அந்த நிமிடங்கள் காணாமல் போனதாக
உச்சந்தலை மின்விசிறியிடம் முறையிட்ட நேரம்
அலுவலக வேலைகள் அதிகமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது
உரிய காரணங்கள் இருக்கலாம் - என தீர்ப்பு எழுதிகொண்ட நேரம்
ஆயிரம்தான் இருந்தாலும் என்றும்-எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசும் மனம்,
கொஞ்சம் ஆழ்ந்து ஆராய்ந்து அலசி பார்க்க சொல்லும் நேரம்
"அதே நேரம்" - மீண்டும் மீண்டும் - தினம் தினம் -
ஆனால் சிந்தனைகள் மட்டும் கண்டிப்பாய் மாறும் - மாறும்
வயதுகள் போட்டி போட்டு முந்திக்கொண்டு ஓடினாலும்
வார்த்தைகள் மனதிற்குள்ளேயே முடங்கிப்போய்
பாரம் ஆக்கி விட்டது நம்மை..
நம்மை நாமே லேசாக்கி கொள்ள -
முடங்கிய வார்த்தைகளைக் கொஞ்சம் சிதற விட -
எடுத்த முயற்சியாக இருக்கட்டும் இந்த - "தினம் தினம் - அதே நேரம்".
வாழ்க மகிழ்வுடன்,
நிமல்.